Card image cap

மரண அறிவித்தல் திரு சேனாதிராஜா இராஜதிலகம்

Informed by சுகந்தன் on Feb. 19, 2025

Card image cap

திரு சேனாதிராஜா இராஜதிலகம்
(ஒய்வுபெற்ற பிராந்திய தொழில்நுட்ப உத்தியோகத்தர் - நீர்ப்பாசனத் திணைக்களம் - யாழ்ப்பாணம்)
தோற்றம் - 20.03.1945
மறைவு - 18.02.2025
யாழ் இமையாணன் மேற்கு உடுப்பிட்டியை பிறப்பிடமாகவும் இடைக்காடு, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு சேனாதிராஜா இராஜதிலகம் அவர்கள் பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலம்சென்ற சேனாதிராஜா - இராசம்மா தம்பதியரின் அருமை மகனும்,
காலம்சென்ற சபாரத்தினம் - சிவகாமிஅம்மை தம்பதியரின் பாசமிகு மருமகனும்,
தனலட்சுமி அவர்களின் ஆருயிர்க் கணவனும்,
தாரிணி, பாமினி ஆகியோரின் அன்புத் தந்தையும்
சுகந்தன், ஜெகதீஸ் (ஜெகன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்
வேணுஜன், ஹருஷிகன், கார்த்திகன், அட்சரன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்
சத்தியலட்சுமி, இரவீந்திரநாதன், காலம்சென்ற சித்திராலட்சுமி, காலம்சென்ற ஜெயலட்சுமி, சுரேந்திரநாதன் ஆகியோரின் அருமைச் சகோதரரும்
காலம்சென்றவர்களான அற்புதசுந்தரி, சுப்பிரமணியம் சரஸ்வதி ,முத்துக்குமாரசாமி, ஆறுமுகசுவாமி சிவலோகநாயகி ,லோகநாயகி அப்புதுரை ஆகியோரின் அன்பு மருமகனும்
குமாரசுப்பிரமணியம், பராசக்தி, கந்தசாமி, மங்கையர்க்கரசி, கேசவமூர்த்தி, காலம்சென்ற சாந்தாலட்சுமி, அன்பழகன் ,இந்திராதேவி ,சித்திராதேவி, முரளிதரன் , குமுதினி, முகுந்தன், வாகினி, மாதினி, ஐன்னி, துஷியந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்
மோகனாம்பாள், சண்முகராஜா, மாதினி ஆகியோரின் அன்புச் சகலரும்
பவஹாரிணி, நாதஸ்வரூபிணி, வித்தியானந்தி, சேயோன், அரவிந்தன், சியாமளன், சரண்யன், பூஜிதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்
சியாமசுந்தரன், அபிராமி, கோசலைகோபன், ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்
கோகுல், கேசிகா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் நாளை காலை 8.30 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பிற்பகல் 2.30 மணியளவில் கிரியைகள் நடைபெற்று பிற்பகல் 4 மணிக்கு கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அயலவர் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர் - 0112730226