இடைக்காடு மகா வித்தியாலய நூற்றாண்டு விழா., 2026

By J. S. R on Feb. 10, 2025

Card image cap

சிந்திப்போம் ! ஒன்று சேர்வோம்! முன் நிற்போம்! செயற்படுவோம் !
———————————————————
எமது பாடசாலையின் நிலைமை பற்றிய முழுதகவல்களும் தங்கள் யாவருக்கும் விபரமாக தெரிந்திருக்கும் என திடமாக நம்புகின்றோம்,பாடசாலையின் மாணவர் தொகையினை அதிகரிக்கவேண்டிய கட்டாயமான நிலையில் நாம் செயற்படவேண்டிய நிலைக்கு நாம் உள்ளாக்கபட்டுள்ள காரணத்தினை முன்னிட்டு தரமாமான கட்டிட வசதிகளையும் மிக சிறந்த ஆசிரியர்களையும் சிறந்த போக்குவரத்து வசதிகளையும் ஏற்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ள சூழ் நிலையில் நாம் எல்லோரும் இணைந்து எமது சகல வளங்களையும் திரட்டி எமது சொந்த விடயங்களை எவ்வாறு மதிப்பெடுத்து அதற்கேற்ப பல இக்கட்டான நிலையிலும் செயலாற்றி ஒவ்வொரு விடயங்களையும் வெற்றிகரமாக கையாளுகின்றோமோ அதேபோல் இவ் விடயத்திலும் செயலாற்ற வேண்டிய தருணம் இவ் வேளை !

எமது பாடசாலை ஆரம்பிக்கும் முன்பாக எம் ஊரவர்கள் அச்சுவேலி, புத்தூர், தொண்டைமானாறு போன்ற ஊர்பாடசாலைகளிற்கு கால் நடையாக பல சிரமங்களுக்கு மத்தியிலும் சென்று கல்விகற்று அப்போதைய குறைந்த சம்பளத்தில் பெரிய குடும்பத்தினை பராமரித்துவரும் வேளைதனில் எமது ஊர் கமக்கார உறவுகள் ஒரு அந்தர் வெண்காயம் வெறும் 20 தொடக்கம் 35 ரூபா வரையும் ஒரு இறாத்தல் செத்தல் மிளகாய்2.50 தொடக்கம் 3.50 வரையும் விற்று குடும்பத்தின் செலவுகளை சமாளிக்க திணறிக்கொண்டுக்கும் வேளையில் நாம் படும் அல்லது பட்ட கஸ்டங்களை அடுத்த சந்ததி படக்கூடாது என்ற பொது நல நோக்கினை தம் சுய நலமாக கருதி அதற்கான தொடர்பணிகளை தம் சொந்த பணிகளாக ஒவ்வொருவரும் எண்ணி தன்னலமற்ற பொது நல மனப்பான்மை கொண்ட நிலதாரிகளிடம் நன்கொடை ரீதியில் இவ்வளவு பரந்த தேசத்தில் அமைத்திருக்கும் பாடசாலை நிலப்பரப்பினை பெற்று ஒவ்வொருவருவரும் தம் பிள்ளைகள் , பேரப்பிள்ளைகள், பூட்டன், பூட்டிகள் கஸ்டப்படாது கல்வியறிவிலும் பொதுஅறிவிலும் சிறந்தவர்களாக உருவாக்க வேண்டும் , எம் ஊர் முன்னுதாரண ஊராக என்றும் சிறப்பாக இருக்கவேண்டும் என்ற அடிப்படையில் உருவாக்கிய பாடசாலை கட்டிடங்களையே இப்போது நாம் காண்கின்றோம் , அப்பாடசாலையிலே நாம் கல்விகற்று மிக சிறந்தவர்களாகவோ அல்லது ஓரளவு சிறந்தவர்களாகவோ நாம் இருக்கின்றோம் ! இப்பாடசாலையினை அமைக்க காரணமானவர்களோ அல்லது அமைத்தவர்களோ இப்பாடசாலையில் கல்விகற்கவில்லை என்பதே உண்மையான விடயம், அவர்கள் தம் வாழ்க்கைக்காலத்தில் சிறந்த மனிதசமூக செயற்பாட்டார்களாக தம்மை நிலை நிறுத்தியதின் விளைவே நாம் மிக இலகுவாக 8.30 க்கு ஆரம்பிக்கும் பாடசாலைக்கு வீட்டிலிருந்து 8.15 க்கு பின் புறப்பட்டு பாடசாலை 3.30 க்கு நிறைவடைய 3.45 க்குல் வீட்டிற்கு செல்லக்கூடிய நிலையில் இருந்து கல்வி கற்றோம் என்பதினை யாரேனும் மறுத்துரைக்க முடியுமா ?இப்போது எமது ஊர் பாடசாலையில் கல்வி கற்காத எமது முன்னோர்கள் செய்த மனம் நிறைந்த பாடசாலையினை திருத்த வேலைகள் மட்டுமே செய்து நூற்றாண்டு விழாவினை 2026 கொண்டாட ஒன்று சேர்ந்துள்ளோம் ! திருத்தப்பணிகளை மட்டுமே செய்கின்றோம் இவ்வேளையில் !!

நாம் இப்பாடசாலையில் முதல் தரத்தில் இருந்து 10 ம் தரம் வரை கல்விகற்று விவசாயத்தில் புரட்சி செய்யவில்லையா ? அதற்கு மேலும் உயதரம்வரை கல்வி கற்று அரச பதவிகளில் கதிரைகளில் அமரவில்லையா ? ஏன் இப்பாடசாலையில் முற்றுமுழுதாக பயின்று பல்கலைக்கழகம் சென்று உயர்பதவிகள் பெற்று வீராப்புடன் சிறந்த பொருள் ஈட்டி எமக்கென ஓர் அடையாளத்தினை சமூகத்தின் மத்தியில் நிலை நிறுத்தவில்லையா,?புலம் பெயந்து சென்று நாம் கஸ்டப்பட்டு உழைத்து நல்ல நிலையில் பொருள் ஈட்டி இப்போது ஓரளவு ஆடம்பர வாழ்வுக்குள் எம்மை திணிக்கவில்லையா ? இங்கு ஆடம்பர வாழ்வு என்பது 2 அறை கொண்ட வீடு போதுமே என்ற நிலைப்பட்டில் இருந்து நழுவி 4/5 அறை கொண்ட வீடுகள், £ 5000 பவுண்ஸ் அல்லது 10000 டொலர் பெறுமதியான வாகன போக்குவரத்திற்கு ஈடுபடுத்தி வாழமுடியும் என்றாலும் புது ரக விலை அதிகமான வாகனம் வாங்கி அதிக காப்பீடு செலுத்தி எமது தகுதிகளை மற்றவர்கள் முன் நிலை நிறுத்தும் மனோ நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் எம் மன நிலையினை ஒரு கணம் தட்டி நீர் கல்வி கற்ற பாடசாலைக்கு இதுவரை காலத்திலும் என்ன செய்தாய் என்ற கேள்வினை எழுப்புவோமாமானால் ! நாம் எதுவுமே செய்யவில்லையே என்ற பதிலே எம் அடி மனதின் ஓரத்தில் இருந்து பதிலாக கிளம்பும் ! எமது காலத்தில் நாம் கல்விகற்ற பாடசாலைக்கு ஏதாவது ஒரு புதிய கட்டிடத்தினை கட்டி அடுத்து வரும் சமூகத்திற்கு கொடுத்திருக்கின்றோமா ? இல்லவே இல்லையே !!!நாம் புலம் பெயர்ந்து கஸ்டப்பட்டு உழைக்க தொடங்கிய காலத்தில் இருந்து வருடாவருடம் வெறும் £ 50 பவுண்ஸ் , 50 டொலரோ அல்லது 50 பிராங்கினையோ நாம் கல்விகற்று இந்த நிலைக்கு ஆளாக்கிய பாடசாலைக்கு தகுந்த வேளையில் ஒதுக்கி இவ் நற்பணிகளை எல்லோரும் திட்டமிட்டு செய்து முடிக்க தகுதி இல்லாத மானிடப்பண்ற்றவர்களா நாம் ! சிந்திப்போம் ! வாகனம் ஒன்று வாங்க நாம் ஒதுக்கும் மேலதிக பணத்தில் மேலும் ஒரு ஆயிரத்தினை ஒதுக்கி எமது நாம் கல்வி கற்ற பாடசாலையினை அலங்கரிக்கும் விதமாக அமையவுள்ள உள்ளக அரங்கு மண்டபம் அமைப்பதில் எமது பணமும், பலமும், மனமும் இணையட்டும் ! செயலாற்றுவோம்! 2026ல் நிறைவு செய்து ஒன்று கூடுவோம் அனைவரும் எம் பாடசாலையில் !!!!

சு. நவகுமார் (நந்தன். கனடா )