இ. ம. வி ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான தனியான நூலகம் ஒன்று திரு திருமதி ஸ்ரீசத்தியானந்தம் அவர்களினால் திறந்து வைக்கப்படுள்ளது

By மாஸ்டர் சுதாஸ்ர் இ. ம. வி on Dec. 1, 2022

Card image cap

30.11.2022 அன்று புதன்கிழமை காலை 7.30 மணிக்கு ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான தனியான நூலகம் ஒன்று திரு திருமதி ஸ்ரீசத்தியானந்தம் அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது.எமது பாடசாலையின் பிரதி முதல்வர் திருமதி கவிதா லலீசன் அவர்களின் எண்ணக்கருவிலே ஆரம்பப்பிரிவு ஆசிரியர்களின் முயற்சியினால் ,திரு திருமதிஸ்ரீ சத்தியானந்தம் (சுவிஸ்) அவர்களின் முழுமையான பங்களிப்புடன் சிறுவர்களுக்கான நூல்களை மட்டும் உள்ளடக்கியுள்ளது.இதுவரை காலமும் ஆரம்பப்பிரிவு மாணவர்கள் பாதையைக் கடந்து நூலகத்திற்கு செல்வதற்கு பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர். எதிர்காலத்தில் ஆரம்பப்பி்ரிவு மாணவர்களின் வாசிப்புத்திறன் அதிகரிக்கும்.இதனால் கற்றல்திறன் அதிகரிக்கும்.இவ் உன்னதமான பணிக்கு நூல்களை வாங்கி அன்பளிப்பு செய்ததுடன்.இந்நூல் நிலையத்தை வர்ணம் தீட்டி அழகுபடுத்தும் பொறுப்பையும் தாமாகவே முன்வந்து ஏற்றுக்கொண்டமை சிறப்பு.இந்நிகழ்வில் பழையமாணவர்கள் திரு ஆறுமுகம் சந்திரகுமார் ,திரு வேலுப்பிள்ளை செங்கோ, திருமதி பாமதி வைரவநாதன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
தகவல் மாஸ்டர் சுதாஸ்ர்