By நா. மகேசன். கனடா. on Oct. 20, 2026
உங்கள் திறமைகளை நீங்கள் கட்டாயம் பயன்படுத்தியே ஆக வேண்டும்
நீங்களே உங்களது திறமைகளை, பரிசோதித்துப் பார்த்தபின் நீங்கள் ஒரு பொது மதிப்பீட்டிற்கு
வர முடியும். அந்த வகையில் தங்களை மதிப்பீடு செய்யாதவர்கள் தங்களை மிகுதியாகவோ
அல்லது குறைவாகவோ மதிப்பீடு செய்து கொள்கிறார்கள். புத்திசாலித்தனம் திறமைக்கு
வழிவகுக்காது, பலருக்கு புத்திசாலித்தனம் இருந்தும் திறமை அற்றவர்களாக இருக்கின்றார்கள்.
காரணம் அவர்கள் தங்கள் புத்திசாலித்தனத்தை மறைத்துக் கொள்வதுதான். இப்படிப்பட்டவர்கள்
சந்தர்ப்பத்தைத் தட்டிக் கழித்துக்கொண்டே வருவார்கள்.
சிலர் திறமைசாலிகளாக இருப்பார்கள் ,ஆனால் அவர்களிடம் புத்திசாலித்தனம்
மந்தமாக இருக்கும், இவர்கள் செய்யும் வேலைகளில் மற்றவர்களுக்கு பேரிழப்பை
ஏற்படுத்தும். யாரும் இவரை நீங்கள் புத்திசாலி என்று கூறி விடுவார்கள். இவர்கள் அதை
புகழுக்காக எடுத்துக் கொள்வார்கள். கடுமையான உழைப்பு மட்டும் போதாது, சூழ் நிலை
அறிந்து செயல்படவேண்டும். சிலர் தங்களுக்கு மரபுவழியாகவே திறமை உண்டு என்று,
எங்கள் மூதாதையர்கள் அதைச் செய்தார்கள், இதைச் செய்தார்கள் என்று சொல்வார்கள்,
மற்றவர்கள் காட்டும் திறமைகளை, மழுங்கடிப்பார்கள். இப்படி எண்ணம் கொண்டவர்கள்
தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொள்வார்கள்.
இன்னும் சிலர் திறமைகளை யதார்த்தமாக மதிப்பீடு செய்வதற்கு எதிர் எல்லை
நிலையில் இருக்கிறார்கள். அவைகளை விட்டு எறியுங்கள்.
1. உங்கள் மூடத்தனமான எண்ணங்களை உடைத்து எறியுங்கள்.
2. உங்கள் சிந்தனைத் திறன்கள் உபயோகமாக இருக்கின்றதா அல்லது உபத்திரபமாக
இருக்கின்றதா எனக் கண்டறியுங்கள்.
3. உங்களது மன விலிமையை மேம்படுத்த வழிவகை செய்யுங்கள்.
4. சில திறமைகள் எங்களுக்குச் சாத்தியமா என ஆராயுங்கள்.
5. உங்கள் சக்திக்கு மீறிய செயல்களை தவிர்த்து, ஏமாற்றமும், தோல்வியுமடைவதைத்
தவிருங்கள்.
6. உள்ளார்ந்த உண்மையான திறமைகளை பாவியுங்கள்..
7. ஒருவேளை உங்களது முயற்சி தோல்வியடைந்தால், மற்றவர்களின் ஆலோசனை,
அபிப்பிராயம், அனுசரணை என்பவற்றைப் பெற தயாராகுங்கள்.
8. உங்கள் நண்பர்களோ அல்லது உறவினர்களோ சற்று அதிகமாகவோ அல்லது சற்று
குறைவாகவோ திறமை இருக்கு என்று நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த
வித்தியாசங்களை பொருட்படுத்தாது உள்ளார்ந்த மனதுடனே நண்பர்கள்
உறவினர்களுடன் பழக வேண்டும்.
உங்களது திறமைதரும் செயற்பாட்டுத் திட்டங்களும் ஒரு குறை என்று நினைக்காதீர்கள்.
நா. மகேசன்.
கனடா.