By நா. மகேசன் கனடா. on Aug. 6, 2026
இவர்களைப் போல் வாழ வேண்டும், குறைகள் கூறுவதை நிறுத்த வேண்டும்
அறிவு, அனுபவம், வயது, கல்வித்தகுதிகள் எதுவாக இருந்தாலும் இப்படிப்பட்டவர்களை,
எல்லோரும் எங்கேயும் விரும்பத்தான் செய்வார்கள். இவர்கள் மேற்பார்வை இல்லாமலே
வேலை செய்யும் கடினமான உழைப்பாளிகள். மற்றவர்களின் மனநிறைவை அறிந்து கொண்டு
சந்தர்ப்பத்திர்கு ஏற்றவாறு வேலைகளை செய்து முடிப்பவர்கள். எதையும் சரியாகப்
புரிந்துகொண்டு மற்றவர்களின் ஆணைகளை நிறைவேற்றுவார்கள். உண்மையைப் பேசுவார்கள்
ஏதேனும் அவசர வேலைகள் வந்தால் தயங்காமல், மகிழ்ச்சியுடன் வேலை செய்வார்கள்,
இதனால் வரும் நல்ல பயன்பாட்டை எண்ணி மகிழ்ச்சியடைவார்கள்.
பயன்பாட்டுக்கான திறவுகோலை ஒரு வார்த்தையில் சொல்லலாம். இன்னும் கொஞ்சம்
அதிகமாக வெற்றி பெறவேண்டும் என்றால் அதைச் செய்வார்கள். இப்படிப்பட்டவர்கள்
அடக்கம், பெருந்தன்மை, இன்னும் கொஞ்சம் அதிகமாக நற்குணங்களைப் பெற்று இருப்பார்கள்.
இவர்கள் மற்றவர்களின் நம்பிக்கைக்கு உரியவராக இருப்பதைவிட நல்ல எண்ணங்களையும்
திட்டங்களையும் கொண்டு இருப்பார்கள் நம்பிக்கை இல்லாத நம்பிக்கை நீதியை நிலை நாட்ட
முடியாது. திறமை இருந்தாலும் நீதி இல்லாத திறமை அநீதியை நிலை நாட்டும். மிகச் சிறந்த
கல்வித் தகைமை கொண்ட அதி புத்திசாலிகளின் வாழ்க்கையில் தோல்வி
அடைந்தவர்களாகவும் இரண்டாம் தரத்திற்குத் தள்ளப்பட்டு விடுவார்கள். ஏன் என்றால்
இவர்கள் ஏன்தான் வாழ்க்கையில் பின் தள்ளப்படுகிறேன் என்று ஆராய்வது இல்லை. இதனால்
எதிர்மறையான விளைவுகளைச் சந்தித்து பின்தள்ளப்பட்டு விடுவார்கள்.
1. ஊகத்தில் தகவல்களைக் கூறுவதை நிறுத்துங்கள்.
2. ஆதாரம் இல்லாத விடயங்களை சரியான கருத்து என்று ஏற்றுக் கொள்ளாதீர்கள்.
3. தகவல்களைத் தருபவர் யார் என்று கூறாமல் விட்டால் அந்த தகவல்களை ஏற்றுக்
கொள்ளாதீர்கள்
4. இவர்தான் செய்து இருப்பார், அவர் செய்யக் கூடியவர்தான் என்ற அனுமானத்தை
நிறுத்துங்கள்.
5. கற்பனை ஊகங்களை உண்மை என்று ஏற்றுக் கொள்ளாதீர்கள்.
6. தகவல் தருபவர் யார் என்று தெரிவிக்காத தகவலைப் பொய் என்று அதை நம்பாதீர்கள்.
இந்த மனப்பாங்கை கடைப்பிடிப்பவர்கள் புத்திசாலித்தனத்தைவிட கல்வித் தகுதிகளை
விட மிக மேன்மையானது, விடா முயற்சியின் இடத்தை வேறு எந்த திறமையும் அந்த
இடத்தைப் பிடிக்க முடியாது. ஏன் பலர் திறமை இருந்தும் தோற்றுப் போய்
இருப்பார்கள். பண்பும் மதிநுட்பமும் அந்த இடத்தைப் பிடிக்க முடியாது. ஏன் பலரின்
மதிநுட்பம் மற்றவர்களால் கண்டு கொள்ளப்படாமலே இருக்கின்றன. கல்வியும் இந்த
இடத்தைப் பிடிக்க முடியாது. ஏன் பலர் படித்தவர்களாக இருந்தும் பாழாய்ப்போய்
இருக்கிறார்கள்.
முழுமையான செல்வாக்கைப் பெறுவதற்கான பயணம் மிக சுலபமானாது அல்ல. இது
பல எதிர்ப்புக்களையும் பின்னடைவுகளையும் கொண்டு இருக்கும். ஒவ்வொரு
தடவையும் தடைகளை எதிர்த்து துள்ளி எழ வேண்டும். எதிர்ப்புக்களும் தடைகளும்
வரும்போது தயக்கம் வரக் கூடாது. எதிர்ப்புக்களையும், துன்பங்களையும் தாங்கிக்
கொண்டு இருப்பதிலும் ஒரு தனி இன்பம் உண்டு. விடா முயற்சி என்பது செய்யத்
தொடங்கிய வேலையைச் செய்து முடிப்பதுவே ஆகும். ஒருவர் செய்த ஆக்கங்களை
பெருமையாகக் கூறுங்கள், அவர்களைப் பற்றி குறை கூறுவதை நிறுத்துங்கள்.
தகவல்களைத் தருபவர் யார் என்பது தெரிவிக்காமல் விட்டால் அத் தகவல்களை
ஏற்றுக் கொள்ளாதீர்கள்.
நா. மகேசன்
கனடா.