Informed by Sugeekaran on July 14, 2026
**மண்ணில்:** 11.04.1950
**விண்ணில்:** 12.07.2026
# **அமரர் திரு. சங்கரப்பிள்ளை சிறீகுகன் **
## **மரண அறிவித்தல்**
யாழ்ப்பாணம் வயாவிளானைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட **அமரர் திரு. சங்கரப்பிள்ளை சிறீகுகன் ** அவர்கள் 12.07.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற **திரு திருமதி சங்கரப்பிள்ளை** தம்பதியரின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற திரு. திருமதி கந்தையா பொன்னம்மா தம்பதியரின் அன்பு மருமகனும் **திருமதி பரமேஸ்வரி** அவர்களின் அன்புக் கணவரும், **அரன் (பிரான்ஸ்), அஜித்** ஆகியோரின் பாசமிகு தந்தையும், **கார்த்திகா, நிடோசனா** ஆகியோரின் அன்பு மாமனாரும், **கணேஷ், அகரன், மித்ரா, மிருனா** ஆகியோரின் பாசமிகு **பேரப்பாவும்** ஆவார்.
மேலும், **சிறீதரன் (சின்னக்கிளி), அருந்ததி (சுவிட்சர்லாந்து), ஜெயந்தி (கனடா), சிறீநாதன் (பிரான்ஸ்), சிறீரகு (கனடா)** ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் **16.07.2026 (வியாழக்கிழமை) காலை 10.00 மணியளவில்** **Mahinda Parlour, Mount Lavinia** மலர்சாலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும்.
அதனைத் தொடர்ந்து, **பிற்பகல் 1.00 மணியளவில்** இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பின்னர் **General Cemetery, Mount Lavinia** மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
### **தகவல்**
அன்னாரின் பிரிவால் துயருறும்
**மனைவி மற்றும் பிள்ளைகள்**
**தொடர்புக்கு (மகன்):**
**அஜித்** – 077 996 3107