By J. S. R on June 21, 2026
குறிந்த நபர் ஒருவர் நூற்றாண்டு விழா தொடர்பாக இலங்கையிலும் பணத்தை வழங்கி வெளிநாடுகளிலும் பணத்தை வழங்கிய சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.
எனவே நூற்றாண்டு விழா விசேட செயற்குழுவினரால் வழங்கப்பட்ட பட்டியலில் உங்கள் பெயர் உள்ளனவா எனவும் குறித்த நாடு ஒன்றின் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளனவா எனவும் சரிபார்க்கவும்.
நூற்றாண்டு விழா மலரில் பெயர்பட்டியலை வெளியிடும போது மொத்த தொகையை குறித்த நபருக்கு எதிரே குறிப்பிடுவது சிறப்பானதாக அமையும்
ஒரு பாடசாலையின் வளர்ச்சி என்பது மாணவர்களின் அபார கல்வித்திறமையிலும் அவர்களை வழிகாட்டுகின்ற ஆசிரியர்களிலும் மற்றும் அனைவரின் நிதிப் பங்களிப்பிலும் தங்கியுள்ளது .எமது பாடசாலையில் கல்விபயிலும் அநேகமானவர்கள் திறமைசித்தியுடன் பல்கலைக்கு செல்லும் அதேநேரம் விளையாட்டுக்களிலும் பிரபல கல்லூரிகளுடன் போட்டிபோட்டு வெற்றிபெற்றிருப்பதானது பாடசாலையின் தொடர்ச்சியான வளர்ச்சியை நிரூபிக்கின்றது . அதேநேரம் எமது கல்வித்தாய் நூற்றாண்டு விழாவுக்காய் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கின்றாள்.இவ்வேளையில் பாடசாலையின் அக்கறையில் ஆர்வமுள்ள உலகெலாம் பரந்து வாழுகின்ற உறவுகள் தங்களால் முடிந்த பாரிய கொடையின் மகத்துவத்தை அறிந்து வாரி வழங்கியதை அறிய மனம் பூரிக்கின்றது .இச்செயல் மூலம் எல்லோர் மனதிலும் கல்வித்தாய் இடம் பிடித்திருக்கின்றாள் என்பது பெருமை .இப்பங்களிப்பு மட்டுமல்ல உங்கள் அன்பைசெலுத்த, நீங்கள் எல்லோரும் நேரடியாக வருகைதந்து நிகழ்ச்சிகளில் பங்குபற்றி அங்கே நடந்திருக்கின்ற அபிவிருத்திகளை உங்கள் கண்களால் பார்க்கும்வேளை உங்களின் கொடையின் மகத்துவத்தை மனதார உணர்ந்து புளகாங்கிதம் அடைவீர்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை . மேலும் உலகெலாம் பரந்து வாழ்கின்ற பழைய மாணவர்களுடன் கூடி குலாவுகின்ற, பழைய நினைவுகளை மீட்டுகின்ற ஓர் அரிய வாய்ப்பை உங்களுக்கானதாக மாற்றுங்கள். இன்னும் தாமதிக்காதீர்கள்.உங்கள் வரவை உறுதிப்படுத்துங்கள் .
மேலும் இக்கொடையாளிகள் அனைவருக்கும் கெளரவ சின்னங்கள் வழங்கப்பட்டு உரிய மரியாதை வழங்கப்படுவதானது இப்படியான நிகழ்வுகளில் அவசியமாகிறது .கெளரவ கிண்ணங்களுக்கான செலவை விழாக்குழுவே பொறுப்பேற்பதே சிறப்பு என்பதோடு இப்படியான மதிப்பளிப்புகள் வருங்கால அபிவிருத்திகளுக்கு தூண்டுகோலாகவும் அமையும் . இன்னமும் தமது பங்களிப்பினை தவறவிடடவர்கள் தங்களால் இயன்ற பங்களிப்பினை வழங்க முன்வாருங்கள்.இவ்வுதவிகள் இப்பாடசாலையின் இருப்பையும் மதிப்பையும் வலுவூட்டுவதோடு தொடர்ந்து வளர உதவியாக இருக்கும் .
நன்றி
வை. பொன்னீஸ் (கனடா )