Idaikkadu MV Smart class opening 25-03-2021

By : Narayanapillai Swaminathan (March 27, 2021)
Idaikkadu MV Smart class opening 25-03-2021 யா/இடைக்காடு ம்வி இல் மூன்றாவது திறன் வகுப்பறை திறந்து வைப்பு எமது வித்தியாலயத்தில் 1988ம் ஆண்டு சாதரண தர வகுப்பிலும் 1988ம் ஆண்டு உயர்தர வகுப்பிலும் கல்வி கற்ற பழைய மாணவர் அணியினால் வழங்கப்பட்ட ரூபா 447 388.00 நிதியைக் கொண்டு திறன் வகுப்பறை அமைக்கப்பட்டது. இதற்கான நிகழ்வு 25.03.2021 அன்று வித்தியாலய முதல்வர் திரு கு.வாகீசன் அவர்களின் தலைமையின் கீழ் நடந்து அறை திறந்து வைக்கப்பட்டது. அவர்களது நிதியினால் ஆய்வுகூடத் தொகுதி கட்டிடத்தின் நுழை வாயிலில் புதிதாக அமைக்கப்பட்ட ரூபா 75 000.00 பெறுமதியான சுருக்கு கதவுFolding Gate இம் மாணவரின் ஆசிரியரான திரு நா.சுவாமிநாதன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அறையின் பெயர்ப்பலகை டாக்டர் நா. கந்தசாமி அவர்களால் திறக்கப்பட்டது. திறன் காட்சிப் பலகை திரு சிவகுருநாதன் கருணாகரன் (Quantity Surveyor)அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. மாணவர்களின் மாதிரி கற்பித்தல் வகுப்புக்களும் முன் வைக்கப்பட்டன. செல்வி வேணுஜா நந்தகுமார் நன்றியுரை நவின்றார்.திறன் வகுப்பறைக்கான இணைய இணைப்பும் இந்நிதி மூலம் செய்யப்பட்டது.
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19